Super Singer: சூப்பர் சிங்கரில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்த நடிகை சுகன்யா! மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சூப்பர் சிங்கர் சீசன் 11-ல் ஒளிபரப்பாகிவரும் நிலையில், தற்போது நடிகை சுகன்யா சிறப்பு நடுவராக உள்ளே நுழைந்துள்ளார்.
சூப்பர் சிங்கர் 11
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சீசன் 11 ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பல திறமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வரும் நிலையில், தற்போது என்றென்றும் கேப்டன் என்ற தலைப்பில் இந்த வாரம் போட்டி நடைபெறுகின்றது.
மக்கள் மனதில் என்றும் கேப்டனாக வலம்வரும் விஜயகாந்தின் பாடல்களை பாடி அசத்தியுள்ளனர். இதில் சிறப்பு நடுவராக நடிகை சுகன்யா களமிறங்கியுள்ளார்.
தான் விஜயகாந்துடன் நடித்த அனுபவத்தையும், அவரது படத்தின் பாடல் ஒன்றினையும் பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |