நீ எந்த சாதி? பாட்டு பாட போனாலே இந்த கேள்வி தான்- கண்ணீருடன் வெற்றியாளர் அருணா
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசனில் முதல் இடத்தில் வெற்றி பெற்ற அருணா பல உண்மைகளை தற்போது கூறியுள்ளார்.
சூப்பர் சிங்கர்
பிரபல ரிவியில் சனி மற்றும் ஞாயிறு கிழமையில் மாலையில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 9. இந்நிகழ்ச்சியில் அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், ஸ்வேதா மோகன், உன்னி கிருஷ்ணன் நடுவராக இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் 22 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதி போட்டியில் அபிஜித், அருணா, பூஜா, பிரியா, பிரசன்னா ஐந்து பேர் காணப்பட்டனர்.
இதில் அருணா முதல் இடத்தையும் தட்டித்தூக்கியுள்ளார். இவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும், 10 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சூப்பர் சிங்கர் வரலாற்றில் டைட்டில் வென்ற முதல் பெண் போட்டியாளர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.
மனம் வருந்திய அருணா
சூப்பர் சிங்கர் அருணா சாதியால் அதிகமான பிரச்சினையை சந்தித்துள்ளாராம். இந்நிகழ்ச்சிக்கு முன்பு பல மேடைகளில் பாடிய இவரிடம், மற்றவர்கள் கேட்கும் முதல் கேள்வி சாதி என்ன என்பதுதானாம். தனது சாதியை கூறிவிட்டால் அடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடுமோ என்று வெளியில் கூறாமலே சமாளித்து வந்துள்ளாராம்.
மேலும் இவ்வாறு தொடர்ந்து கேட்டு வருவதால் வெளியே சென்று பாடுவதற்கு பயந்து வீட்டில் முடங்கிய நாட்களும் உண்டாம். தற்போது சூப்பர்சிங்கரால் நான் அவர்களுக்கு பதில் அளித்துவிட்டேன். இனி எங்கு சென்றும் என்னால் பாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறி கண்ணீர் சிந்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |