சூப்பர் சிங்கர் 11ல் டைட்டில் வின்னருக்கு கிடைத்த பரிசுகள் என்ன தெரியுமா?
விஜய் டிவியில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 11 இல் டைட்டில் வின்னராக நிகில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சூப்பர் சிங்கர் 11
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் 11 இறுதி சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இறுதி போட்டியாளர்கள் மிகவும் சிறப்பாக பாடி இருந்தனர்.
தங்களுடைய இசை திறமையால் மட்டுமே இந்த இறுதிச்சுற்று மேடையில் போட்டியாளர்கள் கால் பதித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த சீசனில் முதல் ரன்னர்-அப் இடத்திற்கு சரண் மற்றும் திஷாதனா தேர்வாகி உள்ளனர்.
இவர்களுக்கு பரிசாக தலா 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்தை மீனாட்சி பெற்றார்.
நான்காவது இடத்தில் தவசீலினி, ஐந்தாவது இடத்தில் ஆபிரகாம், ஆறாவது இடத்தில் தர்ஷனா ஆகியோர் தேர்வாகினர். இதில் டைட்டில் வின்னராக நிகில் தேர்ந்தெடுக்கபட்டார்.

டைட்டில் வெற்றியாளரான நிகிலுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.
சூப்பர் சிங்கர்' என்பது ஒரு பாடல் போட்டி நிகழ்ச்சி மட்டுமல்ல. பல இளம் பாடகர்களை உருவாக்கிய பெருமை இந்த இசை அரங்கத்தையே சாரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |