Super Singer 11: நடுவர்களை வெட்கப்பட வைத்த சரண் ராஜா... கிடைத்த பரிசு என்ன தெரியுமா?
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 11ல் தற்போது கிராமத்து காதல் சுற்று நடைபெற்று வருவதால் போட்டியாளர்கள் கலக்கி வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் 11
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது 11வது சீசன் நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் பல திறமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வரும் நிலையில், கடந்த வாரம் முதல் பைனலிஸ்டாக நிகில் சென்றுள்ளார்.

இதில் சரண் ராஜா செல்வார் என எதிர்பார்த்த நிலையில், நிகில் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த வாரம் கிராமத்து காதல் சுற்று நடைபெறுகின்றது.
இதில் சரண் ராஜா அந்த நிலாவைத் தான் நான் கையில பிடிச்சேன் என்ற பாடலைப் பாடியுள்ளார். இவரது குரல் மற்றும் எக்ஸ்பிரஷன் அனைத்தும் நடுவர்களை அதிகமாக கவர்ந்தது.
தற்போது சரண் ராஜாவைக் கௌரவப்படுத்தும் விதமாக நடுவர் தனது கை கடிகாரத்தை கழற்றி சரணுக்கு அணிவித்துள்ளார். இதனை அவதானித்த சக போட்டியாளர்கள் பிரமிப்பில் காணப்படுகின்றனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |