மாதவிடாயின் போது அதிகம் சோர்வாக உணர்கின்றீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்
பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிகவும் சோர்வாக உணர்வார்கள். மாதவிடாயின் போது உடலில் ஏற்படும் ஹேர்மோன் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
இந்த நேரத்தில் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்த காலத்தில் பெண்களுக்கு உணவின் மீது நாட்டம் குறைவாகவே இருக்கும்.
ஆனால் மாதவிடாய் காலத்தில் தான் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளைச் உட்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகள்
மாதவிடாயின் போது ஆரோக்கியமான உணவுகளை தெரிவு செய்து சாப்பிட வேண்டியது அவசியம்.
மாதவிடாய் வருவதற்கு ஒருவாரத்திற்கு முன்பே பெண்கள் உணவு தொடர்பாக அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும்.
மேலும் இரத்த போக்கினால் உடலில் கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் இதிலிந்து பாதுகாப்பு பெற உணவில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள், சுக்கு, மிளகு போன்றவற்றை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.
பெருங்காயம்
மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லாவர்கள் மற்றும் அதிக குருதிப்போக்கு உள்ளவர்களும், நீர்க்கட்டி உள்ளவர்களும் உணவில் பெருங்காயத்தை அதிகளிவில் எடுத்துக்கொள்ள வேண்டும் இது புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை சீர்செய்யும் அதனால் மதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.
பச்சை இலை காய்கறிகள்
மாதவிடாயின் போது பச்சை இலை காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கீரைகள், பழங்கள், தானியங்கள், ராகி, உளுந்து, முட்டை, பால், போன்றவை மாதவிடாயின் போது ஏற்படக்கூடிய வலிகளில் இருந்து தீர்வு கொடுக்கும்.
மாதவிடாயின் போது ஏற்படும் தசைபிடிப்பை சீர்செய்ய கேழ்வரகு, சோளம், கம்பு, தினை போன்ற தானிய வகைகளையும் அதிகமாக சாப்பிடுவது தீர்வு கொடுக்கும்.
வெந்தயம்
மாதவிடாய் போது உடவில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனவே உடலை குளிர்ச்சியாக வைக்க வெந்தயத்தை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வெந்தயம் உடல் சூட்டை குறைப்பதுடன் மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளில் இருந்து நிவாரணம் கொடுக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |