10 நிமிடங்களில் 100% சார்ஜிங்! Super Fast சார்ஜிங் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட் இதோ
வெறும் 10 நிமிடத்தில் 100 சதவீதம் சார்ஜ் செய்யும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட் போன்களின் பட்டியலை இங்கு தெரிந்து கொள்வோம்.
நவீன உலகில் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் தொழில்நுட்பம் விரைவாக வளர்ச்சியடைந்து வருகிறது.
பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மொபைல் போனை சார்ஜ் போடுவதற்கு கூட நேரம் இல்லாமல் பலரும் இருக்கின்றனர்.
இவ்வாறு நினைக்கும் நபர்களுக்கு கூட வேகமாக சார்ஜ் ஏறும் ஸ்மார்ட்போன்கள் அதிகமாக வந்துள்ளது. சில நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் ஸ்மார்ட்போன்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன.
குறைந்த விலையில் குறுகிய நேரத்தில் சார்ஜ் ஆகும் போன்கள் தற்போது கிடைக்கின்றன. விரைவாக சார்ஜ் ஆகிறது என்பது மட்டுமல்லாமல் அதிக நேரம் பேட்டரி நிலைத்து இருக்கிறது.
Fast Charging ஸ்மார்ட்போன்கள்
Realme GT5 Pro
செப்டம்பர் 2023ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட் போனானது மிகவும் விரைவல் சார்ஜ் ஆகும். இரண்டு சார்ஜிங் வகைகளில் அதாவது ஒன்று ரியல்மி GT5 150W மற்றொன்று ரியல்மி GT5 240W. இதில் 240W மாடல் வெறும் 80 வினாடிகளில் 1% இருந்து 20% வரை சார்ஜ் ஆகிவிடும். 100% சார்ஜ் ஆக வெறும் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே எடுக்கும்.
Redmi Note 12 Explorer
இந்த ஸ்மார்ட் போனாது 210W அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்டது. இது 4,300 mAh பேட்டரியை 9 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய உதவுகிறது.
OnePlus 10T
150W ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்ட இந்த ஸ்மார்ட் போனாது, 4,800 mAh பேட்டரியை 18 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய உதவுகிறது.
Xiaomi 14 Pro
120W ஃபாஸ்ட் சார்ஜ் அம்சத்தை கொண்ட இந்த ஸ்மார்ட் போனானது, சராசரியாக 22 முதல் 27 நிமிடங்களில் பேட்டரியை 100 சதவீதம் சார்ஜ் செய்ய உதவுகின்றது.
Motorola Edge 40
125W ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்ட Motorola Edge 40 என்ற ஸ்மார்ட் போனானது வெறும் 23 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |