Google Pay, PhonePe பயன்படுத்துபவரா? பயத்தை போக்கும் புதிய மாற்றம்
கூகுள் மற்றும் போன் பே பயனர்களுக்கு பயமில்லாமல் பணத்தை அனுப்புவதற்கு புதிய வழிமுறை வெளியாகியுள்ளது.
UPI செயலிகள்
இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற யுபிஐ செயலிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த செயலிகள் மூலம் விரைவாகப் பணம் அனுப்பவும், பெறவும் முடியும் என்பதாலும், அவ்வப்போது இதில் சில சலுகைகள் கிடைப்பதாலும் மக்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.
உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி வெளியூரில் இருந்து வாங்கும் பொருட்களுக்கும் அமர்ந்த இடத்திலேயே பணத்தை அனுப்பமுடியும் என்பதால் மக்கள் பெரும்பாலும் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையையே ஆதரிக்கின்றனர்.
Representational Image
புதிய அமைப்பு என்ன?
குறித்த டிஜிட்டல் பணபரிமாற்றம் அதிகரித்து வரும் நிலையில், யுபிஐ மோசடிகளும் அதிகரித்து வருகின்றது. தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மையுடனும் செய்ய இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
இப்போது யுபிஐ கட்டணங்கள் பின்னுக்குப் பதிலாக பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே உள்ள இந்த அம்சங்களைப் பயன்படுத்தி, யுபிஐ கட்டணங்களை இன்னும் பாதுகாப்பானதாகவும் எளிதாகவும் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
வங்கி விவரங்கள் அல்லது பின்னின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படும் பயனர்களுக்கு இந்த புதிய மாற்றம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம், கைரேகை அல்லது முகம் ஏற்கனவே கணினியில் சேமிக்கப்பட்டுள்ள நபர் மட்டுமே பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இந்த நடவடிக்கை மூலம் மோசடி சம்பவங்களை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |