இந்த புள்ளி உங்களது மொபைலில் இருக்கின்றதா? அப்போ ஹேக் செய்யப்பட்டிருக்காம்
உங்களது மொபைல் போனில் இந்த புள்ளி காணப்பட்டிருந்தால் ஹேக்கர்களினால் உங்களது போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தமாம்.
ஸ்மார்ட்போன்
இன்றைய காலத்தில் அனைவரது கைகளில் ஸ்மார்ட்போன் என்பது சர்வ சாதாரணமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது.
காரணம் அந்த அளவிற்கு மக்களுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. மேலும் தற்போது வங்கி விபரம் உட்பட அனைத்தையும் நமது போனில் உள்ளதால், ஹேக்கர்கள் எளிதில் ஹேக் செய்துவிடுகின்றனர்.
பொது வைஃபையைப் பயன்படுத்துதல், ஸ்பேம் இணைப்புகளைக் கிளிக் செய்தல், அங்கீகரிக்கப்படாத செயலிகளை பதிவிறக்குதல் போன்ற பல வழிகளில் ஸ்மார்ட்போனை ஹேக் செய்யலாம். இது ஹேக்கர்கள் உங்கள் மொபைலை ரகசியமாகக் கையாள வழிவகுக்கும்.
ஹேக் செய்யப்படுவதை எப்படி தெரிந்து கொள்வது?
உங்களது மொபைலின் திரையின் மேல் பகுதியில் பச்சை நிற புள்ளி அல்லது பச்சை நிறத்தில் குறியீடு தெரிந்தால் உங்களது அழைப்புகள் பதிவு செய்யப்படுகின்றது. இல்லையெனில் கேமரா அல்லது மைக் பயன்பாட்டில் உள்ளது என்றும் அர்த்தமாம்.
கேமரா மற்றும் மைக்கைப் பயன்படுத்தாமல், பச்சைப் புள்ளி தெரிகிறது என்றால், மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். உங்கள் மொபைலில் உள்ள தனிப்பட்ட தகவல்களும் திருட்டு போகும் ஆபத்தில் இருப்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
மொபைலில் உள்ள தேவையற்ற மற்றும் சந்தேகத்திற்குரிய அனைத்து செயலிகளையும் அகற்றிவிட்டு ஃபாக்ட்ரி ரீசெட் செய்ய வேண்டும் என்று வல்லுநர்கள் புரிந்துரை செய்கிறார்கள்.
உடனடியாக மொபைலில் உள்ள அப்ளிகேஷன்களில் கேமரா மற்றும் மைக்கை பயன்படுத்துபவை எவை என்று சரிபார்த்து, சந்தேகத்திற்குரியதாகத் தோன்றும் எந்த செயலியையும் நீக்கிவிட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |