பலரின் நெஞ்சங்களை கவர்ந்த ரோஜா சீரியல்.. வெளியான முதல் காட்சி- எப்போது ஆரம்பம்?
சின்னத்திரையில் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றான ரோஜா சீரியலில் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கடந்த 2022 ஆம் ஆண்டு வரை பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் நெஞ்சங்களை வென்ற சீரியலாக ஓடிக் கொண்டிருந்தது தான் ரோஜா.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று TRP-ல் பட்டையை கிளப்பிய இந்த சீரியல் முடிவு ரசிகர்கள் வருத்தமடைய வைத்தது.
இதனை தொடர்ந்து இந்த சீரியலின் இரண்டாம் பாகம் குறித்து பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.
யார் கதாநாயகி தெரியுமா?
இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தற்போது ரோஜா 2 குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சன் டிவி வெளியிட்டுள்ளது.
அர்ஜுன் ரோஜாவின் மகள் மலரின் கதை இது என இந்த ப்ரொமோவில் தெரிவித்துள்ளனர்.
ரோஜாவாக நடித்து நம் மனங்களை கவர்ந்த நடிகை பிரியங்கா நல்காரி தான், ரோஜா 2-விழும் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஹீரோவாக நடிகர் நியாஸ் கான் நடிக்கிறார், அத்துடன் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமாகியுள்ள ஹரிப்பிரியா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட புகழ் ராஜ்குமாரும் ரோஜா 2 சீரியலில் நடிக்கிறார்கள்.
இப்படியாக முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |