கர்ப்பிணி மம்மியை ஆய்வு செய்து மிரண்டு போன ஆராய்ச்சியாளர்கள் - அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி
மம்மியைச் சுற்றி ஆராய்ச்சிகள் காலம் காலமாக நடைபெற்று கொண்டு இருக்கின்றது.
இந்த ஆய்வுகளில் மக்கள் பலரும் வியந்து போகும் அளவிற்கும் சில நேரம் நிறைய அரிய விஷயங்கள் வெளியே தெரிய வரும்.
அப்படி ஒரு மம்மி குறித்து தற்போது தெரிய வந்துள்ள தகவல் பலரையும் மிரண்டு போக செய்துள்ளது.
அதிர வைத்த ஆராச்சியாளர்கள்
சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மியை போலாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று, ஆய்வு மேற்கொண்டுள்ளது.
"Mysterious lady" என அந்த மம்மிக்கு ஆராய்ச்சியாளர்கள் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதன் மண்டை ஓட்டை ஆயுவுக்கு உட்படுத்தி உள்ளனர்.
அப்போது, அதில் வழக்கத்திற்கு மாறான சில தடயங்கள் இருந்ததாகவும், அவை Nasopharyngeal Cancer எனப்படும் புற்று நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு இருக்கும் தடயம் போலவும் இருந்துள்ளது.
இதனால், மூக்கில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக, அந்த மம்மி முன்பு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மம்மி தொடர்பான பல்வேறு ஆய்வு முடிவுகள், ஆய்வாளர்களைக் கூட வியப்பில் ஆழ்த்தி வரும் சூழ்நிலையில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மி, புற்று நோய் மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பலரையும் மிரண்டு போகச் செய்துள்ளது.
முதல் கர்ப்பிணி மம்மி
முன்னதாக, இந்த ஆராய்ச்சியின் தொடக்கத்தில், அது முன்பு வாழ்ந்த ஒரு ஆண் பாதிரியாரின் மம்மி என கூறப்பட்டது.
ஆனால், பின்பு அது ஒரு பெண் மம்மி என்பதும், அவர் இறந்த போது கர்ப்பிணியாக இருந்துள்ளதும் பின்னர் தெரிய வந்தது.
உலகின் முதல் கர்ப்பிணி மம்மியும் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புற்று நோய் காரணமாக, இந்த மம்மி உயிரிழந்த தகவல் ஒருபுறம் இருக்க, கர்ப்பிணி பெண் என்பதும் அதிக பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.