சூரியன் மறைந்தப் பிறகு இந்தப் பொருட்களை மறந்தும் கூட தானம் செய்து விடாதீர்கள்!
பொதுவாக நாம் எதற்கு எடுத்தாலும் வாஸ்து பார்ப்பது வழக்கம். இந்த வழக்கத்தைப் பின்பற்றி தான் பலரும் பல வேலைகளை செய்வார்கள்.
அதே விடயத்தை எமது முன்னோர்களும் அடிக்கடி சொல்லுவார்கள் இந்த விடயத்தை இந்த நேரத்தில் செய்யக்கூடாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
வாஸ்து சூரியன் மறைந்த பிறகு சில பொருட்களை தானம் செய்யவே கூடாதாம் அப்படி செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு இல்லாமல் போகும், பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
தானம் கொடுக்க கூடாத பொருட்கள்
சூரியன் மறைந்த பிறகு யாருக்கு பால் தானம் செய்யக் கூடாது ஏனெனில் அந்த நேரத்தில் பாலை தானம் செய்தால் லட்சுமி தேவி மற்றும் விஷ்ணு பகவானையும் கோபப்படுத்துவது போலாகும். இதனால் உங்கள் வீட்டில் பொருளாதாரம் மோசமாகிக் கொண்டே போய் வீட்டில் செல்வம் இல்லாமல் போகும்.
தயிரையும் தானம் செய்யக் கூடாது ஏனெனில் தயிரானது சுக்கிர கிரகத்துடன் தொடர்பு பட்டதால் இவ்வாறு தயிரை தானம் வழங்கும் போது அது உங்களின் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இதை மீறி கொடுத்தால் சுக்கிரனின் கோபத்திற்கு ஆளாகுவீர்கள்.
இதில் மிக முக்கியமானது சூரியன் மறைந்த பிறகு பணம் தானம் கொடுக்கவே கூடாது. இவ்வாறு பணத்தை தானத்தைக் கொடுப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் செல்வத்தை வெளியில் அனுப்புவதற்கு சமம். இதனால் உங்கள் வீடுகளில் செல்வம் நிற்காமல் போய்விடும்.
பூண்டு மற்றும் வெங்காயத்தை தானம் செய்ய கூடாது ஏனெனில் இந்த பொருட்கள் கேது கிரகம் தீய சக்திகளின் அதிபதி என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு தானம் கொடுப்பதால் பல வகையான தந்திரங்கள் வந்து விடும் என சொல்லப்படுகிறது.
சிலர் மஞ்சளை கடவுளாக பார்ப்பார்கள் அப்படிப்பட்ட மஞ்சளை ஒரு சிலர் தானம் கொடுக்கமாட்டார். மஞ்சளை தானம் கொடுத்தால் வியாழன் கிரகம் பலவீனமாகும். இதனால் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரும் வீடுகளில் தினமும் பிரச்சினை வந்துக் கொண்டே இருக்கும்.