கவர்ச்சி நடிகை சன்னி லியோனியின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா? வாயடைத்துப் போகும் ரசிகர்கள்
பொலிவூட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகை சன்னி லியோன் சொத்துமதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
சன்னிலியோன்
பேபி டால் பாடலின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் தான் சன்னிலியோன். இவர் இந்திய வம்சாவளிப் பெண் தான்.
இவர் 2011ஆம் ஆண்டு இந்திய ரியாலிட்டி தொடரான பிக்பாஸ் 5 இல் பங்கேற்று பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் தான் இவரை கூகுளில் தேடிய போது இவர் ஒரு கவர்ச்சி நட்சத்திர நடிகை என அறியப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குபின் ராகினி எனும் திரைப்படத்தில் நடித்து வசூல் ரீதியாக பெறும் சாதனை படைத்திருந்தது. அதன்பிறகு தமிழிலும் வடகறி எனும் திரைப்படத்தில் சிறப்புத்தோற்றத்திலும் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடிக்க ஆரம்பித்து பிரபலமானார். தமிழில் 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்திருக்கிறார் தற்போது வீரமாதேவி எனும் படத்திலும் நடித்து வருகிறார்.
சன்னிலியோன் பலருக்கும் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டாலும் அவர் நிஜ வாழ்க்கையில் பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
சொத்து மதிப்பு
இந்நிலையில் சன்னிலியோனின் சொத்து மதிப்பு பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் அவரின் சொத்து மதிப்பானது 100 கோடிக்கு மேல் இருக்கிறதாம்.
மேலும், இவர் ஒரு படத்திற்கு மாத்திரம் 1.2 கோடி சம்பளம் பெறுவதாகவும் லாஸ் ஏஞ்சல்ஸில் சொந்தமாக பிரம்மாண்ட பங்களாவும், மும்பையில் சொந்தமாக வீடும் வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சன் சிட்டி மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |