படப்பிடிப்பில் திடீர் குண்டுவெடிப்பு! மருத்துவமனையில் லியோ பட நடிகர் சஞ்சய் தத்
படப்பிடிப்பில் திடீரென குண்டு வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் சஞ்சய் தத்
இயக்குனர் பிரேம் இயக்கத்தில், கன்னட நடிகர் துருவா சர்ஜா நடித்து வரும் 'கேடி' படத்தின் படப்பிடிப்பு, பெங்களூருவில் உள்ள மகடி சாலையில் படமாக்கப்பட்டு வந்தது.
இதில் ஹீரோ துருவா சர்ஜா மற்றும் வில்லன் சஞ்சய் தத் ஆகியோர், மோதும் வெறித்தனமான சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இந்த சண்டை காட்சியை ஸ்டண்ட் இயக்குனர் ரவி வர்மா இயக்கி வந்தார்.
இந்த சண்டை காட்சியில் போது, படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. விறுவிறுப்பாக இந்த காட்சி எடுத்து வந்த போது, எதிர்பாராத விதமாக, டம்மி குண்டு சற்று வீரியத்துடன் சஞ்சய் தத் பக்கத்திலேயே வெடித்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
நடிகர் சஞ்சய் தத்தின் முகம், கை மற்றும் முழங்கை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேல் சிகிச்சைக்கு பெங்களூரில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஆனால் இதுகுறித்து படக்குழுவினர் எந்தவொரு உறுதியான தகவலையும் வெளியிடாமல் இருப்பதால், சஞ்சய்யின் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.
தமிழில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் வில்லனாக களமிறங்குவது குறிப்படத்தக்கது.