சுந்தரா ட்ராவல்ஸ் பட நடிகையை ஞாபகம் இருக்கின்றதா? இப்போ எப்படியிருக்காங்கனு பாருங்க
சுந்தரா ட்ராவல்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ராதாவின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
சுந்தரா ட்ராவல்ஸ்
நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சுந்தரா ட்ராவல்ஸ். மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இந்த படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது.
இப்படத்தில் முரளி மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து நகைச்சுவையில் பட்டையை கிளப்பி இருப்பார்கள். இன்றும் அந்த காட்சிகளை பார்த்தல் அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார் நடிகை ராதா. இப்படத்தை தொடர்ந்து கேம், அடாவடி, காத்தவராயன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரது படங்கள் பெரியளவில் வரவேற்பினை பெறவில்லை. சில ஆண்டுகளுக்கு பின்பு சினிமாவிலிருந்து விலகியுள்ளார்.
நடிகை ராதாவின் தற்போதைய புகைப்படம்
தற்போது சின்னத்திரையில் கலக்கிக்கொண்டு இருக்கிறார். பிரபல டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து தற்போது வேறொரு டிவியில் ஒளிபரப்பாகி வரும் பவித்ரா சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ராதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தில் நடிகையா என பயங்கர ஆச்சரியத்துடன் அவதானித்துள்ளதுடன், கருததுக்களையும் பதிவிட்டும் வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |