காதும் காதுமாய் திருமணத்தை முடித்த சுந்தரி சீரியல் நடிகர்- வாழ்த்தி தள்ளும் பிரபலங்கள்
காதும் காதுமாய் திருமணம் செய்த சுந்தரி சீரியல் நடிகரின் தாலிக்கட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுந்தரி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஹிட் கொடுத்த சீரியல்களில் ஒன்று தான் சுந்தரி.
கணவர் இன்னொரு பெண்ணை விரும்பும் பொழுது தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்து கணவரை வாழ வைக்கும் பெண்ணாகவும், அதே சமயம் குடும்பத்தினரும், தன்னை நம்பிய பெண்ணும் நலமாக இருக்க வேண்டும் என்று நினைத்து வாழும் பெண்ணாகவும் இருக்கும் பெண்ணின் கதையை கருவாகக் கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டது.
இந்த சீரியல் நடிகை கேப்ரில்லா செல்லஸ்வுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாகியவர் தான் ஜிஷ்ணு மேனன்.
இவர், சுந்தரி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். கதாநாயகராகவும், மனைவிக்கு வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். முதல் பாகத்தை தொடர்ந்து சுந்தரி இரண்டாம் பாகத்திலும் இவர் நடித்திருந்தார்.
காதல் திருமணம்
இப்படி சின்னத்திரை வாழ்க்கை ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், ஜிஷ்ணு மேனன் கடந்த சில வருடங்களாக மேக்அப் ஆர்ட்டிஸ்ட் அபியாத்ரா என்பவரை காதலித்து வந்தார்.
இந்த நிலையில், ஜிஷ்ணு மேனன் மற்றும் அபியாத்ரா ஆகியோர் திருமணம் நேற்றைய தினம் பெரிதாக யாருக்கும் சொல்லாமல் கோயிலில் முடிந்துள்ளது.
தம்பதிகள் கேரள முறைப்படி திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |