25 ஆண்டு திருமண நாளை மொட்டை போட்டு கொண்டாடிய சுந்தர் சி, குஷ்பு : வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பு - சுந்தர் சி தம்பதிகள் 25 வது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குஷ்பு - சுந்தர் சி திருமண நாள்
நடிகை குஷ்பு இன்றும் தமிழ் சினிமாவின் ஒரு தீவிர ரசிகையாக இருக்கின்றார். 1990-களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் குஷ்பு. குஷ்பு சுந்தர்சியின் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது அவரிடம் தைரியமாக காதலை வெளிப்படுத்தி இருந்தார் சுந்தர் சி.
ஒன்றில்லை இரண்டில்லை ஐந்து ஆண்டுகள் காதலித்து கடந்த 2000ம் ஆண்டு மார்ச் மாதம் 9ந் தேதி குடும்பத்தினர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். தற்போது குஷ்பு நடிப்பை விட்டு விலகி வருந்தாலும் அவ்னி சினிமாஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
சுந்தர் சி அடுத்தடுத்து பல சினிமாக்களை இயற்றி சில நாட்களுக்கு முன்னர் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு பூஜை போட்டார். இந்த நிலையில் சுந்தர் சி தற்போது தன் மனைவியுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்திருக்கிறார்.
குஷ்பு - சுந்தர் சி இருவருக்கும் திருமணமாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. தங்கள் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகனை தரிசித்துவிட்டு மொட்டை அடித்துள்ளார் சுந்தர் சி. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |