வயிற்றுப் பிரச்சினைகளை செலவில்லாமல் குணப்படுத்தும் சுண்டக்காய் துவையல்: எப்படி செய்யலாம்
பொதுவாகவே பல காரணங்களால் ஒரு சிலருக்கு வயிற்றில் பல பிரச்சினைகள் ஏற்படும். இந்தப் பிரச்சினைகளுக்கு செலவில்லாமல் குணப்படுத்த சுண்டக்காயை கொண்டு துவையல் செய்து சாப்பிட்டால் விரைவில் குணமாகும்.
சுண்டக்காயானது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை கொடுத்து உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. அதுமட்டுமில்லாது சுண்டக்காயின் இலை முதல் வேர் வரை பல மருத்துவ குணங்களைக் கொடுக்கிறது.
அந்தவகையில், இந்த சுண்டக்காயை கொண்டு துவையல் செய்வது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுண்டைக்காய் – 100 கிராம்
நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – கால் கப்
வர மிளகாய் – 5
கறிவேப்பிலை – 2
கொத்து புளி - எலுமிச்சை அளவு
இஞ்சி – சிறிய அளவு
சீரகம் – 1 கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் சுண்டக்காயின் காம்பை நீக்கி நன்றாக இடித்து அலசிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து சுண்டக்காயை வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு வதக்கி எடுத்துக் கொண்ட சுண்டக்காயை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் வதக்கிய அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு உப்பு ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை சூடாக்கி அதில் கடுகு, உளுந்து சேர்த்து அதில் துவையவை போட்டு பிரட்டி எடுத்தால் வயிற்றுப் பிரச்சினைக்கு முடிவு கட்டும் துவையல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |