ஆத்தாவிற்கே சவால் விடும் ஜனனி.. குலதெய்வ கோயிலில் நடந்த அநியாயம்- பரபரப்பான தருணங்கள்
குலதெய்வ கோயிலில் வைத்து நாச்சியப்பன் அவரின் மனைவிக்கு செய்த காரியம் ரசிகர்களை அதிர்ச்சிடைய வைத்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
அந்த வகையில் அண்ணன்-தம்பிகளின் பாசத்தையும், பெண்களின் அடிமைத்தனத்தையும் அடிப்படையாக கொண்டு இந்த சீரியல் சென்றுக் கொண்டிருக்கின்றது.

மூத்த அண்ணனான குணசேகரன் அவரின் மனைவி - குழந்தைகளை தன்னுடைய சுயநலத்திற்காக அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இவர்கள் மட்டுமல்ல முழு குடும்பமும் இவருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குணசேகரன் இருப்பதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை வெடிக்கிறது.
குணசேகரனின் சொத்துக்காகவும், அவரின் மகள் தர்ஷினிக்காகவும் ஜாண்சி ராணியும் அவரின் மகனும் புதிதாக குடும்பத்திற்கு இணைந்துள்ளனர்.

சவால் விடும் ஜனனி
இந்த நிலையில், கதாநாயகியான ஜனனியின் அப்பா நாச்சியப்பன் குலதெய்வ கோயிலில் வைத்து ஜனனி அம்மாவின் தாலியை கழட்டி வாங்குகிறார்.
இப்படி செய்யுமாறு நாச்சியப்பன் குடும்பத்தின் மூத்தவரான ஆத்தா கூறுகிறார். அவரின் பேச்சிற்காக இவ்வளவு நாள் வாழ்ந்த மனைவி என்று கூட பாராமல் சொத்திற்காக நாச்சியப்பன் கடுமையாக நடந்து கொள்கிறார்.

இவர்களின் அநியாயங்களை பொறுத்து கொள்ள முடியாத ஜனனி அவர்கள் முன்னிலையில் பெரிய சவாலொன்றை விடுகிறார்.
ஜனனி இப்படி பேசுவார் என யாரும் எதிர்பார்க்காத நிலையில் இந்த சீன் சீரியல் ரசிகர்களுக்கு ஆர்வத்தை துண்டியுள்ளது.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |