ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகமும் எப்படி ராசிகளை மாற்றி மனித வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துமோ அதே போல தான் நட்சத்திர மாற்றமும் இடம்பெறும்.
அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
இதே தான் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் புனர்பூச நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இதனால் 3 ராசிகளின் வாழ்க்கையில் மாற்றம் உண்டாக்கப்போகிறது. இந்த ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்த பலன்கள் அடுத்த மாதம் 6ம் திகதிக்கு பின்னே உண்டாகும்.

தனுசு | - தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் வருமானத்தில் முன்னேற்றம் இருக்கும்.
- மாணவர்களுக்கு கல்வி வளம் சிறப்பாக வரும்.
- பணி இடத்தில் நல்ல பாராட்டும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
- செய்யும் வேலை அனைத்திற்கும் நல்ல பாராட்டு கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
|
சிம்மம் | - சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது சிறப்பான பலன்களைத் தரும்.
- இந்த கால கட்டத்தில் தன்னம்பிக்கை அதிகமாகும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- புதிய சொத்துக்கள் அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- பணி இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
- நிதி நிலையில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- தினசரி வருமானத்தில் நிலையான அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
|
மேஷம் | - மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
- உங்கள் வருமானம் உயர் நிலையை அடையும்.
- சிலருக்கு புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- உறவுகளில் பிணைப்பு அதிகரிக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கை தித்திக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
- வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
|
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).