மீன ராசியில் சஞ்சாரம் செய்யும் சூரியனால் அடுத்த மாதம் 14ஆம் திகதி வரை கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிக்காரர்கள்!
எம்மில் பலருக்கு ஜோதிடத்தின் மீதும், வேதத்தின் மீதும் பெரிய நம்பிக்கைகள் சுற்றிக் கொண்டே இருக்கும்.
நவக்கிரகங்களின் தலைவனான சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார் இவ்வாறு ராசியை மாற்றிக் கொண்டு ஒவ்வொரு மாதமும் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், பிரதிகூலமான பலன்களையும் கொடுப்பார்.
அவ்வாறு 2023 மார்ச் 15 ஆம் திகதி சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைந்தார். சூரியன் இந்த மீன ராசியில் ஏப்ரல் 14 ஆம் திகதி வரை இருந்து, பின் மேஷ ராசிக்கு செல்லவுள்ளார். மீன ராசியில் இருக்கும் சூரியனால் இந்த மூன்று ராசிக்கரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மேஷ ராசி
மேஷ ராசியின் 12ஆவது இடத்தில் சூரியன் இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
இந்தக் காலப்பகுதியில் இந்த ராசிக்காரர்கள் பல வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். மருத்துவ செலவுகளையும் மன அழுத்தங்களையும், குடும்பத்திலும் வாழ்க்கைத்துணையுடனும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
மேலும், விபத்துகள் பல ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகனம் செலுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி ராசி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இந்த வேளையில் நீங்கள் பல சண்டை, சச்சரவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும், அலுவலகங்களில் உயர் பதவி வகிப்பவர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும். பணவீக்கம் படும் மோசமடையும், தாயுடனான உறவில் விரிசல்கள் ஏற்படும்.
மகர ராசி
மகர ராசியின் 3ஆவது இடத்தில் சூரியன் இருக்கிறார். இதனால் உங்களுக்கும் உங்கள் உடன் பிறந்தவர்களுக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும்.
மேலும், பணப்பிரச்சினைகள் அதிகரித்துக் காணப்படும். அவசரப்பட்டு புதிய தொழில்களில் முதலீடு செய்யாதீர்கள். பல ஆரோக்கியப்பிரச்சினைகளையும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.