ரிஷபத்தில் சூரியன் பெயர்ச்சி : நிதி நிலையில் உச்சமடையும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இருக்கா?
வேத ஜோதிடத்தின் படி கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியடையும்,அதன் போது உருவாகும் அரிய ராஜ யோகங்களும் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை கொண்டிருப்பதுடன் சில சாதக , பாதக மாற்றங்களையும் ஏற்படுத்தும்.

அந்த வகையில் நவகிரகங்களின் அரசனாக அறியப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. இந்நிலையில் சூரியன் மே 15 ஆம் திதகி ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி்ன்றார்.
இந்த ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். சூரியன் சுக்கிரனின் ரிஷப ராசிக்குள் நுழையும் போது தமிழ் மாதமான வைகாசி பிறக்கிறது.
இந்த வைகாசி மாதத்தில் சூரியன் சுக்கிரனின் ராசியில் இருப்பதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் நிதி மற்றும் தொழில் விடயத்தில் வெற்றிகளை குவிக்கப்போகும் ராசிகயினர் குறித்து இந்த பதவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதமானது சூரியன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் மாதமாக இருக்கும். குறிப்பாக இவர்களின் நிதி நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் கூடிவரும். இவர்களின் தொழில் வாழ்க்கையில் அமோக முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியளிக்கும்.
பலவழிகளில் இருந்தும் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் முயற்ச்சிகளில் குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு குறித்த சூரியன் பெயர்ச்சியானது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அமோக முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்.
பொருளாதார நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும். இந்த காலகட்டத்தில் தொட்டதெல்லாம் வெற்றியாகம. வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
பணியிடத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சூரியன் ஆதியால் அதிகாரம் மிக்க பதவியில் அமர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதத்தில் சூரிய பகவான் ஆசியால் நிதி நிலைமையில் அபரிமிதமான ஏற்றம் உண்டாகும்.
தொழிலதிபர்கள் குறிப்பாக ஏற்றுமதி,இறக்குமதி வர்தகர்ககளுக்கு எதிர்பாரத அளவுக்கு லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கும் முயற்ச்சிகள் வெற்றியளிக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றம் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வருவதற்கான யோகம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |