பூச நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சாரம்: நிதி நிலையில் டாப்புக்கே செல்லப்போகும் 3 ராசிகள்!
ஜோதிட ரீதியில் நவ கிரகங்களின் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் ஆழமாக தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
சாஸ்திரங்களின் பிரகாரம் சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். அதனால், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளை விட சூரியனின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த ஜூலை மாதத்தில் சூரியன் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றவிருக்கிறார். ஜோதிடக் கண்ணோட்டத்தில் இந்த மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜூலை 20 ஆம் தேதி சூரியன் பூச நட்சத்திரத்திற்குள் நுழைந்து, ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை அதே நட்சத்திரத்தில் இருப்பார்.
இந்த நட்சத்திர மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் அதிர்ஷ்டமான பலன்களை வழங்கும் என்று கூறப்படுகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்

சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் தரும். பொருளாதார நிலை மேம்படும்.
தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கி வெற்றி பெறும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைத்தாலும், அவை திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அமையும்.
முதலீடுகளுக்கு ஏற்ற காலம் இது. உடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தின் ஆதரவு கிடைப்பதுடன், நீண்டநாள் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள் .
சிம்மம்

சூரியன் ஆட்சி ராசியான சிம்மத்திற்கு இந்தப் பெயர்ச்சி நல்ல பலன்களை வழங்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
புதிய பொறுப்புகள், சம்பள உயர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் புரிதலும் அதிகரிக்கும்.
முதலீடுகளுக்கும் இது சாதகமான காலம். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வரலாம். உடல்நலம் சிறப்பாக இருப்பதால் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் நேர்மறை மாற்றங்களைத் தரும். கொடுத்த பணத்தை திரும்பப் பெறவும், சேமிப்பை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
சமூகத்தில் மதிப்பும் நற்பெயரும் உயரும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். முதலீடுகள் லாபம் தரும்.
நீண்டநாள் ஆசைகள் நிறைவேறி, குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். உடல்நலமும் திருப்திகரமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |