துலாம் ராசிக்குள் நுழையும் சூரியன்: பணப் பிரச்சனையை சந்திக்கப் போகும் 4 ராசிகள்!
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுபவர் சூரியன். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன், தலைமைத்துவம், அதிகாரம், ஆன்மா ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறார்.
மாதம் ஒருமுறை ராசியை மாற்றும் சூரியன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் நுழைகிறார்.

அங்கு நவம்பர் 16ஆம் தேதி வரை இருந்து, பின்னர் விருச்சிக ராசிக்குச் செல்கிறார். சூரியனின் இந்த ராசி மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சிலருக்கு சாதகமான பலன்களும், சிலருக்கு பாதிப்புகளும் ஏற்படலாம்.
குறிப்பாக பண விஷயங்களில் சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படி, இந்த சூரிய பெயர்ச்சியால் பெருமளவில் பணப் பிரச்சனைகளை சந்திக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியின் 5-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற சற்று கடினமாக இருக்கும்.மாணவர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
பண விஷயத்தில் கவனமாக இருந்து, தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பணப் பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.பணப் பரிவர்த்தனைகள் மற்றும் முக்கிய முடிவுகளில் கூடுதல் கவனம் தேவை.
கன்னி

கன்னி ராசியின் 2-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக சில சவால்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக பணியிடத்தில் வாக்குவாதங்களைத் தவிர்த்து, எந்த வேலையையும் கவனமாகச் செய்ய வேண்டும்.
இலக்குகளை அடைய வழக்கத்தைவிட அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். குறிப்பாக பணப் பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு

தனுசு ராசியின் 11-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். பணம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
திட்டமிட்ட வேலைகளில் தடைகளும், தொழில் மற்றும் வேலையில் சவால்களும் வரலாம். பண விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். குடும்பத்தில் மனக்கசப்புகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
கும்பம்

கும்ப ராசியின் 9-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். எனவே ஒவ்வொரு செயலையும் கவனமாக செய்ய வேண்டும். பேச்சைக் கட்டுப்படுத்தி, அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்திக்கலாம்; வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சொத்து ஆவணங்களை முழுமையாகப் படிக்காமல் கையெழுத்திடக் கூடாது. எந்த முடிவையும் நன்கு யோசித்த பிறகே எடுக்க வேண்டும். தேவையற்ற செலவுகளையும் தவிர்ப்பது நல்லது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |