சிம்மத்தில் சூரியன் பிரவேசம்: சாதக பலன் பெறும் 3 ராசிகள்!
ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக சூரியன் கருதப்படுகிறார். சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இந்த ராசி மாற்றம் நிகழும் ஒவ்வொரு முறையும், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படும்.
அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்திலும் சூரியன் தனது ராசியை மாற்றவுள்ளார். ஆனால் இந்த முறை நடைபெறும் சூரிய பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

காரணம், ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பிரவேசித்து பயணிக்கவுள்ளார். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் தன்னம்பிக்கை, கௌரவம், அதிகாரம் மற்றும் தலைமைத்துவத்தின் காரக கிரகமாகக் கருதப்படுகிறார்.
மேலும், சூரியன் தனது சொந்த ராசியில் இருப்பதால் அவரது பலமும் செல்வாக்கும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம், தொழில் முன்னேற்றம், சமூக மரியாதை மற்றும் புதிய வெற்றிகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி, சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் பெயர்ச்சி அடைவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப் போகின்றது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களின் 5-வது வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால், இந்த காலகட்டத்தில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரக்கூடும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறும் சூழல் உருவாகும்.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த இடமாற்றம் இந்த சூரிய பெயர்ச்சியால் சாதகமாக அமையலாம். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும் வாய்ப்பு உள்ளது.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களின் முதல் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பது பல நன்மைகளைத் தரக்கூடியதாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சியும், வருமானமும் கிடைக்கலாம்.
பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
மகரம்

மகர ராசிக்காரர்களின் 8-வது வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால், வாழ்க்கையில் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்படலாம். சமூகத்தில் உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த காலகட்டத்தில் வசதியான வாழ்க்கையை அனுபவிக்கும் சூழல் அமையலாம். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும்.
வீட்டின் வசதிகளும், சௌகரியங்களும் அதிகரிக்கக்கூடும். நிதி நிலைமை மேம்படும் வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் அமைய வாய்ப்புள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |