ஹஸ்த நட்சத்திரத்தில் சூரியன்: இந்த ராசிக்காரர்களுக்கு இனி பொற்காலம் தான்!
ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. இதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலிக்கும் என்று தொன்று தொட்டு நம்ப்ப்படுகின்றது.
அந்தவகையில், நவகிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். தற்போது உத்திர நட்சத்திரத்தில் இருக்கும் சூரியன், செப்டம்பர் 27ஆம் தேதி சந்திரனால் ஆளப்படும் ஹஸ்த நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.

ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பெயர்ச்சியில் சூரியன் அக்டோபர் 10ஆம் தேதி வரை ஹஸ்த நட்சத்திரத்தில் நிலைத்திருக்கிறார்.
சூரியனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் நன்மைகளைத் தரப்போகிறது. அப்படி அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

சூரியனின் நட்சத்திர மாற்றம் மேஷ ராசிக்காரர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்.
கடின உழைப்புக்கான பலன்களைப் பெறும் காலம் இது. பணியிடத்தில் நம்பிக்கை அதிகரித்து, பணிகளை திறம்பட முடிப்பார்கள். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.
வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கலாம். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி, சூரியனின் அருளால் பல நன்மைகள் கிடைக்கும்.
ரிஷபம்

சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். நிதி நிலை மேம்பட்டு, புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.
விரும்பிய சில விஷயங்களை அடைய முடியும்; தங்களைப் பற்றிய பிறரின் தவறான எண்ணங்களும் மாறும். கணவன்-மனைவி இடையே நெருக்கமும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.
வீட்டிற்கு ஆடம்பரப் பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். பணியிடத்தில் செயல்திறன் அதிகரித்து, நீண்ட நாள் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது.
சிம்மம்

சூரியனின் நட்சத்திர மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நேரடியான பலன்களைத் தரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
முதலீடுகளில் நல்ல பலன்களும், ஒப்பந்தங்கள் மூலம் லாபமும் கிடைக்கலாம். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும், சுப நிகழ்வுகளில் பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதி நிலவும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். பழைய உடல்நலப் பிரச்சினைகளும் குறைய வாய்ப்புள்ளது.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் அதிர்ஷ்டகரமாக அமையும். நிதி நிலை மேம்பட்டு, பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம்.
மற்றவர்களிடம் சிக்கியிருந்த பணத்தை மீட்டெடுக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு ஒப்பந்தங்கள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கலாம்.
வேலை தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும், வியாபாரத்தை விரிவுபடுத்தும் சூழலும் உருவாகும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கலாம். குழந்தைகள் தொடர்பாகவும் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |