manathakkali kuzhambu : வயிற்றுப்புண்ணுக்கு அருமருந்தகும் மணத்தக்காளி வத்தல் குழம்பு!

Healthy Food Recipes Stomach Ulcer
By Vinoja Sep 22, 2026 09:54 AM GMT
Report

கிராமப்புறங்களில் எளிதாகக் கிடைக்கும் முக்கியமான கீரை வகைகளில் ஒன்று  தான் மணத்தக்காளி. சிறிய மிளகு அளவில் நறுமணமிக்க பழங்களைத் தருவதால், சில பகுதிகளில் இதை “மிளகு தக்காளி” என்றும் அழைக்கின்றனர்.

மணத்தக்காளியின் இலைகளும் பழங்களும் பாரம்பரியமாக பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளைக் கொண்டதாகக் கருதப்படுகின்றன.

manathakkali kuzhambu : வயிற்றுப்புண்ணுக்கு அருமருந்தகும் மணத்தக்காளி வத்தல் குழம்பு! | Manathakkali Kuzhambu Recipe And Health Benefits

குறிப்பாக வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகளுக்கு இதன் கீரையும் பழங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மணத்தக்காளி வத்தல் நுரையீரல் மற்றும் சிறுநீர்ப்பாதை தொடர்பான சில பிரச்சினைகளுக்கும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

சுவையும், பாரம்பரியப் பயன்களும் கொண்ட மணத்தக்காளி வத்தலை வைத்து சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பை எப்படி செய்வது என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

manathakkali kuzhambu : வயிற்றுப்புண்ணுக்கு அருமருந்தகும் மணத்தக்காளி வத்தல் குழம்பு! | Manathakkali Kuzhambu Recipe And Health Benefits

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள் – மருத்துவர் கூறும் தகவல்!

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள் – மருத்துவர் கூறும் தகவல்!

தேவையான பொருட்கள்

மணத்தக்காளி வத்தல் – 100 கிராம்

சின்ன வெங்காயம் – 200 கிராம் (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 200 கிராம்

நல்லெண்ணெய் – 50 மில்லி

கடுகு – 1 தேக்கரண்டி

வெந்தயம் – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை – 1 கொத்து

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி

மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி

குழம்பு மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி

வெல்லம் – 1 தேக்கரண்டி

புளி – 2 எலுமிச்சை அளவு (ஊறவைத்து சாறு எடுத்தது)

manathakkali kuzhambu : வயிற்றுப்புண்ணுக்கு அருமருந்தகும் மணத்தக்காளி வத்தல் குழம்பு! | Manathakkali Kuzhambu Recipe And Health Benefits

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காயவிடவும். எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து, வெங்காயம் நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.

manathakkali kuzhambu : வயிற்றுப்புண்ணுக்கு அருமருந்தகும் மணத்தக்காளி வத்தல் குழம்பு! | Manathakkali Kuzhambu Recipe And Health Benefits

தக்காளியை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் 7 முக்கிய நன்மைகள்!

தக்காளியை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் 7 முக்கிய நன்மைகள்!

அதன்பின் பூண்டு மற்றும் மணத்தக்காளி வத்தலைச் சேர்த்து சில நிமிடங்கள் நன்றாக வதக்கிக் கொள்ளவும். அடுத்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் குழம்பு மிளகாய்த் தூள் சேர்த்து மிதமான தீயில் நன்றாகக் கிளறி வதக்கிக்கொள்ள வேண்டும். 

மசாலா நன்றாக வதங்கியதும் புளித்தண்ணீரை ஊற்றி, வெல்லத்தையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் மிதமான தீயில் குழம்பு சற்று கெட்டியாகும் வரையில் கொதிக்க விட வேண்டும்.

குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரத் தொடங்கியதும் அடுப்பை அணைத்து இறக்கினால் அவ்வளவுதான், சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு தயார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US