கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள்
ஜோதிட கணிப்புகளில் கிரக நிலைக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. குறிப்பாக கிரகங்களின் அதிபதியாக திகழும் சூரிய பெயர்ச்சி 12 ராசிகளிலும் அதிக தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில், சூரியன் நேற்று 13 ஆம் திகதி சனி பகவானின் மகர ராசியில் இருந்து வெளியேறி, கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார். குறித்த எதிரி கிரங்களின் ஒன்றினைவு 12 ராசிகளிலும் குறிப்பிட்ட சில பாதக தாக்கங்களை ஏற்படுத்கூடும்.

அதுவும் கும்ப ராசியில் ஏற்கனவே ராகு இருப்பதால், குறிப்பிட்ட சில ராசிகள் வாழ்வில் பல்வேறு வகையிலும் துரதிஷ்டத்தை ஏற்படுத்து.
அப்படி இந்த பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு பிரச்சினையாக இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கடகம்

கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளாதால், மனநிலையில் குழப்பமாக நிலை உருவாகும். எந்த முடிவையும் சரியாக சிந்தித்து எடுக்க முடியாது.
மனஅழுத்தம் காரணமாக உறவுகளுக்கு இடையில், கருத்து முறன்பாடுகளால் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் வார்த்தைகளில் நிதானம் தேவை.
இந்த காலகட்டத்தில் புதிய தொழில் தொடங்கும் விடயம், அல்லது சொத்து வாங்கும் விடயங்களை சற்று தள்ளிவைப்பது நல்லது. குறிப்பாக அவசர முடிவுகளை எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
நிதியிழப்பு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் என்பதால், பணத்தை கையாளும் போது அதிக கவனம் தேவை.
கன்னி

கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் உச்சம் பெற்றுள்ளதால், இந்த ராசியினர் சிறிய விடயத்தில் வெற்றி காணவே அதிகளவான உழைப்பை வழங்க வேண்டிய நிலை காணப்படும்.
நிறைய ஏமாற்றத்தைங்களையும் பொருளாதார மந்த நிலையையும் சந்திக்க நேரிடும். குடும்ப உறவுகளிடைய பேசும் போது மிகவும் ஜாக்கிரமையாக இருக்க வேண்டும். குறிப்பாக திருமண உறவில் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
உண்ணும் உணவுகளில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் உணவு ஒவ்வாமை போன்ற ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால்,உடல் நலனில் அதிக அக்கறை காட்டுவது சிறப்பு.
மீனம்

மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் அமந்துள்ளமதால், இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியில் பல்வேறு வழிகளிலும் சிக்கல்கள் ஏற்பட கூடும்.
பண விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பொறுப்புகள் மற்றும் வேலைபளு அதிகரிக்கும்.அதனால் மன அழுத்தம் அதிகமான இருக்கும்.
சின்ன விடங்களுக்கும் அதிகமாக கோபப்படும் நிலை உருவாகும் என்பதால், சூழ்நிலையை அறிந்து நிதானமாக செயல்படுவதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |