ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகப்பெயர்ச்சி ராசியின் பலன்களை மாற்றும் என்பது நம்பிக்கை.
கிரகங்களின் ராஜாவாக இருப்பவர் சூரிய பகவான். இவரின் ஒரு சிறிய மாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சனி பகவானின் ராசிக்குள், மாசி மாதம் சூரிய பகவான் நுழைகிறார்.
இதன்போது சனியும் சூரியனும் இணைவார்கள். இந்த இரண்டு கிரகங்களும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். எனவே இவர்களின் இந்த இணைப்பு நல்ல பலனை தராது.
இதனால் சில ராசிகள் பல சிக்கல்களை சந்திக்க போகின்றனர். அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் முழுமையாக பார்த்து எச்சரிக்கையுடன் செயற்படலாம்.
சிம்மம் | - சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை மிகவும் மோசமான பலன்களை கொடுக்கும்.
- நெருங்கி வரும் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல சங்கடங்கள் உண்டாகும்.
- வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியம் மோசமடையும்.
- நீங்கள் ஏதாவது ஒரு விடயத்தில் பிடிவாதம் பிடித்தால் அது பல அழிவை கொண்டு வந்து சேர்க்கும்.
- உங்களுக்கு யாருடனாவது மனக்கசப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக பேசி தீர்ப்பது நல்லது.
|
விருச்சிகம் | - இந்த கிரக இணைப்பு விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிரச்சனை காலமாகும்.
- எந்த விடயத்தில் முயற்ச்சி செய்தாலும் அதில் தோல்வியே கிடைக்கும்.
- தாயாரின் உடல் ஆரோக்கியம் மோசமாக இருக்கும்.
- உங்களை தவிர மற்றவர்களின் பிரச்சனையில் தலையிடுவது பேராபத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
- பெரும்பாலும் இந்த நேரத்தில் எழும் கவலைகள் சாதாரணமானவை என்று புறக்கணிப்பது நல்லதல்ல.
- தேவையற்ற செலவுகளைக் குறைப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
|
மகரம் | - மகர ராசிக்காரர்களுக்கு, இந்த நேரத்தில் பல சிக்கல்கள் எழலாம்.
- உங்களின் வார்த்தைகள் பலரை காயப்படுத்தலாம், எனவே வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாளுங்கள்.
- நீங்கள் பேசியது அனைத்தும் பின்னர் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.
- நிதி நிலைமை பலமாக மோசமடையும்.
|
கும்பம் | - கும்ப ராசிக்காரர்கள் சனி மற்றும் சூரியனின் சேர்க்கையால் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.
- உங்கள் உடல் நலத்தில் கூடிய கவனம் தேவைப்படும்.
- திருமண வாழ்க்கையில் நீங்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
- இதுவரை நீங்கள் மகிழ்ச்சியாக சந்தித்த விஷயங்கள் இப்போது உங்களுக்கு கவலையானதாக மாறும்.
- புதிய வேலை தேடி அலைந்நதால் கையில் இருப்பதும் போய் நிராயுதபானியாக நிற்ப்பீர்கள்.
- சேமித்து வைத்த பணத்தை ஏதோ ஒரு வழியில் செலவு செய்ய நேரிடும்.
|
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)