சுக்கிர பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு பணப்பிரச்சினை உறுதி! உங்க ராசியும் இதுவா?
பொதுவாகவே இந்து சாஸ்திரங்களிலும் சரி, ஜோதிட கணிப்புகளிலும் சரி கிரக பெயர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில் கிரக பெயர்ச்சியின் பலம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், காதல், செல்வம் என உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாகவும் ரிஷபம், துலா ராசிகளின் ராசி நாதன்நாகவும் திகழும் சுக்கிரன் கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி கும்ப ராசியில் நுழைந்துள்ளார்.

சுக்கிரனின் நிலையில், மாற்றம் ஏற்படும் போதெல்லாம் 12 ராசிகளின் நிதி நிலை, காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை என உலகத்து இன்பங்களுடன் சம்பந்தப்பட்ட ஆடம்பர விடயங்களில் குறிப்பிடத்தக்க சாதக, பாதக தாக்கத்தை ஏற்படுத்துவார்.
அந்தவகையில், கும்பத்தில் சுக்கிரகின் பெயர்ச்சியால் பொருளாதார ரீதியில் அதிக பாதிப்பை எதிர்நோக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி

கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்ந்துள்ளதால், இந்த ராசியினர் வாழ்வில் இதுவரை இருந்து வந்த செழிப்பு சற்று குறைய ஆரம்பிக்கும்.
குறிப்பாக தினசரி வாழ்க்கையை கொண்டு செல்லவே கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாக வாய்ப்புள்ளது. எனவே பணவிடயத்தில் கூடுதல் கவனம் தேவை.
குடும்ப வாழ்க்கையில், தேவையற்ற சிரமங்களையும், சிக்கல்களையும் சந்திக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குன்றும்.
ஆரோக்கிய பிரச்சனைகளால் அதிகம் அவதிப்பட வேண்டிய நிலை உருவாகும் இதன் விளைவாக மருத்துவ செலவுகளை அதிகரிக்கும்.பிடித்த உணவுகளை தவிர்க்க வேண்டி ஏற்படலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் அமர்ந்துள்ளாதால், குடும்ப வாழ்க்கையில் எதிர்ப்பாராத வகையில், பிரச்சனைகளை சந்திக்க வேண்டி ஏற்படலாம்.
வீட்டு செலவுகளில் அதிக கவனம் தேவை. பணத்தை கையாளும் போதும், கொண்டு செல்லும் போதும் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஆரோக்கிய பிரச்சினைகள் அதிகரிப்பதால், மருத்துவ செலவுகளுக்காக அதிக பணத்தை வீணடிக்க வேண்டி ஏற்படலாம். தொழில் செய்யும் இடத்தில் மேலதிகாரியிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கும்பம்

கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளதால், சாதாரண செலவுகள் கையை மீறிப்போகும். அலைச்சல் அதிகரிக்கும்.
பேராசையால் பாரியளவில் பண நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆடம்பர பொருட்களுக்கு நிறைய செலவுகளை செய்வதை தவிர்ப்து நல்லது. முதலீடுகளை செய்யும் போது எதிர்காலம். பலன்கள் பற்றி ஆராய்ந்து செயல்படுத்துவது சிறப்பு.
திருமண வாழ்வில் மகிழ்ச்சி குறைய ஆரம்பிக்கும், உறவுகளுக்கு இடையில் ஒற்றுமை குறைய ஆரம்பிக்கும். ஆடம்பர பொருட்களை தவிர்ப்பது சிறப்பு.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |