சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்!
ஜூலை மாதத்தில் பல முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அவற்றில் மிகவும் சிறப்பான ஜோதிட நிகழ்வாக, நாளைய தினம் ஜூலை 16, 2026 சூரியனும் சந்திரனும் ஒரே நாளில் தங்களது ராசிகளை மாற்றுகின்றன.
சூரியன் மிதுன ராசியிலிருந்து சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது. அதே நேரத்தில், சந்திரன் கடக ராசியிலிருந்து சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது.அதாவது, சூரியன் சந்திரனின் ராசிக்கும், சந்திரன் சூரியனின் ராசிக்கும் ஒரே நாளில் மாறுவதால், இது மிகவும் அரிதான மற்றும் தனிச்சிறப்புமிக்க கிரக அமைப்பாகக் பார்க்கப்படுகின்றது.

இந்த கிரக நகர்வு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், தொழில், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நிதி நிலையில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த அரிய கிரகச் சேர்க்கை கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொடுக்கப்போகின்றது.
போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும், புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் தானாகவே அமையும். புதிய வழிகளில் பணம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கலாம், பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். பழைய முதலீடுகள் மூலம் பலன் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.மொத்தத்தில் இது மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமும் வெற்றியும் தரும் பொற்காலமாக இருக்கும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த கிரகப் பெயர்ச்சி சாதகமான பலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும். தன்னம்பிக்கையும் ஆற்றலும் அதிகரித்து, நிதி நிலை மேம்படும்.
கடந்த கால முயற்சிகளுக்கான பலன்கள் கிடைக்கத் தொடங்கலாம். மூத்தவர்களின் ஆலோசனைகள் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
குடும்பம் மற்றும் பணியிடத்தில் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக அமையவும், புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் உருவாகலாம். குறிப்பாக இந்த கிரக அமைப்பு தொழில் விடயத்தில் உச்சகட்ட சாதக பலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரகச் சேர்க்கை தொழில் வளர்ச்சி மற்றும் அங்கீகாரத்தைத் தரக்கூடும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள், பதவி உயர்வு அல்லது நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கலாம், குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய சொத்து வாங்கும் வாய்ப்பும், எதிர்பாராத வெற்றிகளும் கிடைக்கக்கூடிய காலமாக இது அமையலாம்.
நீண்ட கால கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகள் நிவர்த்தியாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |