கோடை காலத்தில் சுற்றுலா செல்ல தகுந்த இடம் எதுனு தெரியுமா?
சுற்றுலா செல்வது என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். எல்லோரும் சுற்றுலா செல்ல உகந்த காலமாக காணப்படும் காலம் இந்த கோடை காலம் தான்.
நாம் தினமும் வாழும் இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு செல்லுதல் தான் சுற்றுலாாகும். இவ்வாறு செல்லும் போது சிறந்த இடமாக தேர்ந்தெடுத்து செல்வது வழக்கம்.
இப்படி கோடை காலத்தில் சுற்றுலா செல்ல உகந்த ஒரு இடத்தை தான் இந்த பதிவில் விரிவாக பார்க்கப் போகிறோம்.
மேகமலை
இந்த மேகமலையில் பார்க்கும் இடங்கள் எல்லாம் பச்சை பசேலென்று தெரியும். இங்கு தாவரங்கள், வனவிலங்குகள், நூற்றுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன.
இதை தவிர கண்ணுக்கு இதமளிக்கும் வண்ணம் பசுமையான காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள், இதமான சூழல் என மேகமலை நம்மை கட்டி போடுகிறது.
இயற்கையின் அழகை கண்டு களிக்கவும், அமைதியாக நேரத்தை கழிக்கவும் ஏற்ற இடம். இங்கு காப்பி, தேயிலை அதிக அளவில் செய்யப்படுகிறது.
இது தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து 45 கிலோ மீட்டர் மலைப்பாதை வழியாகச் சென்றால் மேகமலையை அடையலாம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
தேனிக்கு செல்பவர்கள் கட்டாயம் இந்த இடத்தை பார்க்காமல் செல்ல மாட்டாாகள். இங்கு மூடுபனி படர்ந்த மலை சிகரங்கள், பசுமையான பள்ளத்தாக்குகள,போன்றவை காணப்படுகின்றன.
இங்கு 63,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சரணாலயம் வனவிலங்கு பிரியர்களுக்கு சொர்க்கமாக உள்ளது. 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி இருக்கும். இரவங்கலாறு அணையிலிருந்து 1 கிமீ தொலைவிலும், மேகமலை பேருந்து நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் மஹாராஜா மெட்டு அமைந்துள்ளது.
இந்த கோடை காலத்தில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான ஒரு இடமாக மேகமலை கருதப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |