கோடை காலத்தில் எண்ணெய் சருமத்திற்கு ஃபேஸ் பெக் இப்படி செய்ங்க
சருமம் தூசி மற்றும் மாசுபாடுகளால் பாதிப்படைந்து காணப்படுகின்றது. இதனால் சருமம் பொலிவிழந்த மந்த நிலையில் காணப்படுகின்றது.
இதற்கு தீர்வாக ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் சருமம் மந்த நிலையில் காணப்படும்.
இந்த எண்ணெய் சருமப்பிரச்சனைக்காக தான் வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த ஃபேஸ் பெக்குகளை பயன்படுத்த வேண்டும். ஃபேஸ் பாதுகாப்பிற்கு என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
எண்ணெய் சருமம்
முகத்தில் தயிரை கொஞ்சமாக தடவி அதை 5 நமிடம் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தை சோப் போடாமல் கழுவ வேண்டும்.
பின்னர் ஒரு உலர்ந்த துணியை கொண்டு நன்றாக நீரை துடைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்தால் எண்ணெய் சருமம் பொலிவாக காணப்படும்.
ஒரு தேக்கரண்டி தேன், தயிர் மற்றும் இன்ஸ்டன்ட் காபி தூள் எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் ஸ்க்ரபிங் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது முகப்பரு இருந்தால் செய்ய கூடாது. அப்படி செய்தால் அது தீங்கை விளைவிக்கும். ஸ்க்ரபிங் செய்த பின் 2 நிமிடம் குளிர்ந்த நீரினால் கழுவி விடவும்.
ஒரு டீஸ்பூன் தேன், கடலை மாவு, தக்காளி சாறு மற்றும் தயிர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இதை நன்றாக கலந்து முகத்தில் ஒரு ஃபேஸ் பெக்காக போட வேண்டும். இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |