அடுப்பில்லாமல் ஆம்லெட் போடும் நபர்! ஒரு நிமிடத்தில் ஷாக்காகிய நெட்டிசன்கள்
அடுப்பு இல்லாமல் வெயிலில் பாத்திரத்தை வைத்து ஆம்லெட் போடும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கோடைக்கால அலப்பறைகள்
தற்போது உலக நாடுகளில் பல இடங்களில் அதிகமான உக்கிரம் வெப்பநிலை இருப்பதால் வெளியில் நடக்கக்கூட முடியாத நிலை இருக்கிறது.
இதனை தொடர்ந்து பல நாடுகளில் இது போன்று காலநிலை தான் நிலவி வருகிறது. பகல் நேர வெப்பநிலை அதிகபட்சமாக 40 டிகிரிக்கு அருகில் இருக்கிறது.
image - mustafagull
அந்த வகையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர் தனது வீட்டின் மொட்டை மாடியில் அடுப்பில்லாமல் ஆம்லெட் போட்டுள்ளார்.
அந்த ஆம்லெட்டை பார்க்கும் போது அசல் அடுப்பில் போட்ட மாதிரி இருக்கிறது. இரண்டு பக்கங்களுக்கு அந்த ஆம்லெட்டை திருப்பி போட்டு அதனை வேக வைக்கிறார்.
அடுப்பில்லாமல் ஆம்லெட் போடும் அதிசயம்
இதனை தொடர்ந்து ஆம்லெட்டை எடுத்து அவர் இறுதியில் சாப்பிட்டும் காட்டுகிறார்.
இந்த வீடியோவை பார்க்கும் போது, அந்தப்பகுதியில் வெப்பநிலை எப்படி இருக்கிறது என தெளிவாக தெரியவந்துள்ளது.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள்,“ எங்களுக்கு இதே நிலைமை தான் ” என புலம்பும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.