உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா...இதை பண்ணுங்க
கோடை காலத்தில் அனைவரும் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், வியர்வை.
வியர்வையினால் வரும் துர்நாற்றம் உரியவர்களுக்கு மாத்திரமல்ல சுற்றி உள்ளவர்களுக்கும் ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தும். எனவே அதிகப்படியான வியர்வையை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் எனப் பார்ப்போம்.
image - MU Health care
சரியான உணவு முறை
காரசாரமான உணவுகள், அல்கஹால் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
நீர்ச்சத்து
நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் எந்நேரமும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது அவசியம்.
image - Men's Health
குளியல்
கோடையில் காலை மற்றும் இரவு நேரங்களில் குளிப்பது, உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
மன அழுத்தம்
அதிகமான வியர்வைக்கு மன அழுத்தம் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் யோகா, தியானம் என்பவற்றை மேற்கொள்ளலாம்.
image - BeBeautiful