சளி பிடித்துவிட்டதா? இந்த மூலிகை தேநீர் மட்டும் போதும்
மழைக்காலம் என்றில்லாமல் வெயில் காலத்திலும் சிலருக்கு சளித்தொந்தரவுகள் ஏற்படலாம், சளி மட்டுமல்லாமல் மூக்கடைப்பு, இருமல், களைப்பு, தலைவலி போன்ற தொல்லைகளும் சேர்ந்து கொள்ளும்.
கோடை காலத்தில் எளிதில் வறட்சி ஏற்படும் என்பதால், அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும், பழச்சாறுகளை அருந்தாமல் பழங்களை அப்படியே சாப்பிடலாம்.
பகல் நேரங்களில் வெளியில் செல்ல நேர்ந்தால், தண்ணீர் சத்து குறையாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
அப்படியும் சளி, இருமல் தொந்தரவு வந்தால் ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் எடுத்துக் கொள்ளாமல் எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம்.
இதற்கான மூலிகை தேநீர் தயார் செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கொத்துமல்லி விதைகள் - கால் கப்
வெந்தய விதைகள் - கால் கப்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
தேன் - 1 டீஸ்பூன்
செய்முறை
அனைத்து பொருள்களையும் இலேசாக வறுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 2 டீஸ்பூன் அளவு பொருட்களை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
நன்றாக கொதித்து தண்ணீரின் நிறம் மாறியபின்னர், வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.
தினமும் இரண்டு முறை மூலிகை தண்ணீரை குடித்து வருவது நல்ல பலனை கொடுக்கும்.
நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் என்பதால், சளிக்கு நல்ல மருந்தாகிறது.
உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?