இன்று முதல் சுக்ராதித்ய ராஜயோகத்தால் 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி
வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக உள்ளார்.
இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுவார். அந்த வகையில் ஜனவரி 13 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசிக்குள் நுழைந்தார்.
இதே நேரத்தில் ஜனவரி 14 ஆம் தேதி கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் மகர ராசிக்குள் நுழைந்தார். இதனால் மகர ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட சில மாற்றங்களை கொண்டு வரும்.
ஆனால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சிறப்பான பலன்களை பெறுவார்கள். அவர்கள் எந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
- மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
- உங்கள் வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்ச்சி அனைத்தும் வெற்றி பெறும். அதனுடன் உங்களுக்கு உயர் பதவிகளுக்கான வாய்ப்பும் அதிகமாக கிடைக்கும்.
- இது வரை வேலை இல்லாமல் வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிக்கலான சூழ்நிலையையும் எளிதில் கையாள்வீர்கள்.
கன்னி
- கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். கலைத் துறையில் இருப்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.
- குடும்ப வாழ்க்கையில் நல்லவை மட்டுமே நடக்கும். தன்னம்பிக்கை அதிகமாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். மற்றவர்களிடம் நிங்கள் இழந்த பணம் உங்களை தேடி வரும்.
தனுசு
- தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- பணியிடத்தில் உங்களின் திறமைகள் நல்ல பாராட்டைப் பெறும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
- பேச்சால் பல வேலைகளை செய்து முடிப்பீர்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் தற்போது உங்களை வந்தைடையும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).