பாரம்பரிய முறையில் அரங்கேறவுள்ள லங்காசிறியின் நம்மவர் பொங்கல் - 2026!
இலங்கையில், உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு, கொழும்பு நகரில் "நம்மவர் பொங்கல் 2026” எனும் பாரம்பரிய விழா நடைபெறவுள்ளது.
பாரம்பரிய நிகழ்வுகளுடன்,உற்சாகமான கொண்டாட்டங்களும் நிறைந்த வகையில், ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த விழா, நாளை 15ஆம் திகதி, கொழும்பில் தெகிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மஹா விஷ்ணு கோவிலில் நடைபெற உள்ளது.
காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இந்த விழா நடைபெறவுள்ள நிலையில் லங்காசிறி ஊடகம் சார்பாக மக்கள் அனைவரையும் வருகவருகவென வரவேற்கின்றோம்.
விழாவின் முக்கியஅம்சங்கள்
குறித்த பாரம்பரிய பொங்கல் விழாவில் , மாலைக் கட்டும் போட்டி, கோலம் போட்டி, கலை மற்றும் கலாசார பாரம்பரிய நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறவுள்ளன.
மேலும், இப்போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெறுவோருக்கு பணப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |