தொழிலில் அபார யோகம் - அள்ளி கொடுக்கும் சுக்கிரன்... ஜாக்பட் யாருக்கு ?
2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதியன்று, சுக்கிரன் ரோகிணி நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சி அடையவுள்ளது. இந்த சுக்கிர தாக்கம் பல ராசிகளின் வாழ்க்கயைில் மாற்றத்தை உண்டாக்கும்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிரன் தற்போது தனது சொந்த ராசியான ரிஷபத்தில் சஞ்சரிக்கிறார். இது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை உண்டாக்கும்.
சுக்கிரன் தற்போது ரோகிணி நட்சத்திரத்திற்குள் பயணிக்கப்போகிறார். இந்த பயணம் சில ராசிகளுக்கு வாழ்க்கைய புரட்டி போடும் தாக்கத்தை பலனை கொடுக்கும்.

ரோகிணி நட்சத்திரம் முதன்மையாக அன்பு, அழகு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றைக் குறிக்கிறது.
இதன் அதிதேவதை சந்திரனாவார். சுக்கிரனும் அன்பு, ஆடம்பரம், மகிழ்ச்சி மற்றும் நல்வாய்ப்பு ஆகியவற்றிற்கு உரிய காரகனாகத் திகழ்வதால், இந்த நட்சத்திரப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபகரமானதாக அமையக்கூடும்.
அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
- மேஷ ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திர நிலையில் ஏற்படும் மாற்றம் பல ராசிகளுக்கு நன்மைகளை கொண்டு வரும். இக்காலகட்டம் உங்கள் தொழில் வாழ்க்கையில் வெற்றியை தேடி தரும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். கடின உழைப்புக்குரிய பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும், உங்கள் மேலதிகாரிகளின் முழுமையான ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும்.
ரிஷபம்
- ரிஷப ராசியனருக்கு இந்த கிரகப் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப்போகிறது. நீங்கள் ஒரு புதிய தொழில் முயற்சியைத் தொடங்குவீர்கள். நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த பணிகள் அனைத்தும் இப்போது நிறைவுபெறத் தொடங்கும். இக்காலகட்டத்தில், உங்களுக்கு இருந்துவரும் உடல்நலப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். உடல் உபாதைகளிலிருந்து உங்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும். உங்கள் பணிகளுக்குப் புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் வாய்ப்புகள் உருவாகக்கூடும்.
கடகம்
- கடக ராசியில் பிறந்தவர்களுக்கு வெற்றிக்கான புதிய வாய்ப்புக்கள் பிறக்கும். உங்கள் வேலைகைள் அனைத்திலும் நீங்கள் சிறந்த முடிவை எடுப்பீர்கள். உங்கள் தனிப்பட்ட செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். கதல் உறவுகளில் நெருக்கமும் இணக்கமும் அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் சாதகமான முடிவுகளை பெறுவார்கள். இக்காலகட்டத்தில் சமூகச் செல்வாக்கு அதிகமாக கிடைக்கும். மக்கள் உங்கள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். எதிலும் வெற்றி பெற பல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).