வரட்டு இருமலையும் அலற விடும் சுக்கு மல்லி காபி! ஐந்தே நிமிடத்தில் சுடச்சுட செய்து பருகுங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை நொடியில் கொடுக்கும் பானங்களில் சுக்கு மல்லி காபியும் ஒன்று.
அடிக்கடி காய்ச்சல், கரகரப்பு, சளி பிரச்சனைகள் இருப்பவர்கள் சுக்கு மல்லி காபி குடித்தால் நொடியில் குணப்படுத்த முடியும்.
இன்று சுக்கு மல்லி காபி எப்படி தயாரிப்பது, என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சுக்கு மல்லி காபி
தேவையான பொருட்கள்
- சுக்கு – 1/2 கப்
- மல்லி – 1/4 கப்
- மிளகு – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- தண்ணீர் – 2 கப்
- பனங்கற்கண்டு – தேவையான அளவு
செய்முறை
முதலில் சுக்கு மல்லி பொடியை தயாரித்து எடுத்து கொள்ள வேண்டும்.
சுக்கு , மல்லி , மிளகு மற்றும் சீரகம் ஆகியவற்றை நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
தண்ணீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 டீஸ்பூன் சுக்கு பொடியை சேர்த்து, பின் அதில் பனங்கற்கண்டு சேர்த்து 3-5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
அதில் உள்ள கற்கண்டு கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டினால்,சுக்கு மல்லி காபி தயார். சுடச்சுட பருகினால் அருமையாக இருக்கும்.
இனி சுக்கு மல்லி காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளையும் காணொளியில் தெரிந்து கொள்ளுங்கள்.