நீரிழிவு நோயாளிகளுக்கு மலிவு விலையில் மாத்திரை - மத்திய அரசு அறிமுகம்
நீரிழிவு நோய்க்கான மாத்திரையை ரூ.60 என்ற விலையில் பிரதம மந்திரியின் மலிவு விலை மருந்தகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 8 ஆயிரத்து 700-க்கு மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே, டைப்-2 நீரிழிவுக்கு 'சிடாக்லிப்டின்' என்ற மாத்திரையை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்தது. இந்த மாத்திரைகள் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும்.

இதில், 50 மி.கி. கொண்ட 10 சிடாக்லிப்டின் பாஸ்பேட் மாத்திரைகள் அடங்கிய அட்டை ரூ.60-க்கு விற்கப்படும். 100 மி.கி. கொண்ட அம்மாத்திரை அட்டையின்
விலை ரூ.100. சிடாக்லிப்டின் மற்றும் மெட்பார்மின் ஹைட்ரோகுளோரைடு இணைந்த கலவை மாத்திரைகள் ரூ.65 மற்றும் ரூ.70-க்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.
பிரதம மந்திரியின் மக்கள் மருந்தக திட்டத்தின் கீழ், ஏழை மக்களும் உயிர் காக்கும் மருந்துகளை மலிவு விலையில் வாங்க வகை செய்யப்பட்டுள்ளது.