ஆசிரியைக்கு வளைகாப்பு நடத்திய மாணவர்கள்: வைரலாகும் வீடியோ காட்சி
கேரள மாநிலத்தின் தலச்சேரியில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது பிரியமான ஆசிரியருக்கு வளைகாப்பு நடத்திய வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
மாணவர்களின் மனதில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் தான் இடம்பிடித்து வைத்துள்ளனர். ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உள்ள காதல் மிகவும் வித்தியாசமானது.
அவரவர்களின் ஆசிரியர்களை யாரும் ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களை சந்தோஷப்படுத்துவது மிகவும் பிடித்த விஷயம் .
இதை உணர்த்தும் முகமாக கேரளாவில் தலச்சேரியில் உள்ள கல்லூரி மாணவர்கள் அவர்களின் பிரியமான ஆசிரியைக்கு வளைகாப்பு செய்யும் நிகழ்வு தொடர்பான வீடியோ இணையத்தில் வரைலாகி வருகின்றது.
ஆசிரியைக்கு ஒரு சர்ப்பிரைஸ் பரிசு கொடுக்க வேண்டும் என எண்ணி இதை மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் ஆசிரியை மாணவர்கள் தன் மீது காட்டும் அன்பை பார்த்து தன் நிலை மறந்து அவருக்கு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது.
மேலும் இவர் இந்த சர்பிரைஸ்க்கு மிக சந்தோஷப்படுகிறார் என்பது அவரின் புன்னகையை வைத்து தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் அனைவரும் மகிழ்ச்சியாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இன்னும் சிலர் 'நான் இந்த வீடியோவை எத்தனை தடவை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை!, என்றும் சிலர் வயிற்றில் உள்ள குழந்தையும் சந்தோஷப்பட்டு இருந்திருக்கும்' எனவும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |