பிரம்மாண்டமாக புதிய வீடு கட்டிய பிரபல சீரியல் நடிகை... வைரலாகும் வீடியோ
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை காயத்ரி யுவராஜ் பிரம்மாண்டமாக புதிய வீடு கட்டியுள்ளார். அது தொடர்பான ஓர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை காயத்ரி யுவராஜ்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை காயத்ரி யுவராஜ்.
இவர் சரவணன் மீனாட்சி, மெல்ல திறந்தது கதவு, சித்தி 2, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல சீரியலில் நடித்திருக்கிறார்.
சீரியலில் மட்டுமல்லாமல், தனது கணவருடன் சேர்த்து Mr & Mrs சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நடிகை காயத்ரி காயத்ரிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் இவர் பிரம்மாண்டமாக புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். அது தொடர்பான ஒரு வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை காயத்ரிக்கும் அவரது குடும்பத்திற்கும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டமாக கட்டிய புதிய வீடு
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |