முகத்தில் தாடி போல் 20 ஆயிரம் தேனீக்கள்! கெத்து காட்டிய கோவை மாணவி
கோவையில் சர்வதேச தேனீக்கள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது முகத்தில் ஆயிரக்கணக்கான தேனீக்களை தாடி போன்ற வடிவில் அமைத்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் தற்போது இணையத்தில் வைராகி வருவதுடன் குறித்த மாணவியின் முயற்ச்சிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவி பாக்கியலட்சுமி, சுமார் 20,000 தேனி பூச்சிகளை ஒரே நேரத்தில் முகத்தில் தாடி போல வடிவமைத்து இருந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தேனீ வளர்ப்பு என்பது நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாகும். பெண்களும் தைரியமாக தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம் என்பதை சமூகத்திற்கு எடுத்துரைப்பதற்காக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வு சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருவதுடன் குறித்த மாணவிக்கு பாராட்டுகளையும் குவித்து வருகின்றது.
தேனீக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், மகரந்தச் சேர்க்கையிலும் முக்கிய பங்கு வகிப்பதால், அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் இந்த நிகழ்வு பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. காணொளியை காண இங்கே கிளிக் செய்யவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |