Tomato Chutney: வெறும் 5 நிமிடத்தில் ரோட்டு கடை தக்காளி சட்னி செய்வது எப்படி?
சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் தக்காளி சட்னியை வெறும் 5 நிமிடத்தில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
தக்காளி -5
பெரிய வெங்காயம் -3
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
கருவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் -1 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதனுடன் தக்காளியை ஒரு 5 நிமிடம் விட்டு வேக வைக்கவும்.
வேக வைத்த தக்காளியை வெளியே எடுத்து அதன் தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
தொடர்ந்து பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தினை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்பு அரைத்து வைத்திருக்கும் தக்காளியை சேர்க்கவும்.
மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் சேர்க்கவும். மஞ்சள், மிளகாய் மற்றும் மல்லி பொடி சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியாக மல்லி இலையினைத் தூவி இறக்கினால் சுவையான தள்ளுவண்டி கடை தக்காளி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |