பொண்டாட்டியின் பிறந்தநாளை மறந்துவிட்டால் சிறை! இன்னும் பல விசித்திர சட்டங்கள் பற்றி தெரியுமா?
நாம் வாழும் இந்த பூமியில் ஒவ்வொரு நாட்டுக்கும் கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் வேறுபடும்.
இதேபோன்று ஒவ்வொரு நாடும் தன் மக்களுக்காக சட்டதிட்டங்களை வகுத்துள்ளன.
இந்த சட்டங்களில் ஒருசில மிக வித்தியாசமாக இருக்கும், இதெற்கெல்லாம் தண்டனையா? என நாம் ஆச்சரியப்படும் அளவுக்கு உள்ள சட்டங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
* சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில் Capri தீவில் உள்ள தெருக்கள் மிக சுத்தமாக இருக்க வேண்டுமாம், ஒருவேளை நாய்கள் தெருவில் அசிங்கம் செய்துவிட்டால் அதை அந்த முதலாளிகளே சுத்தம் செய்ய வேண்டுமாம், இது தவறும் பட்சத்தில் €2,000 அபராதம் விதிக்கப்படும்.
* சுவிட்சர்லாந்தில் இரவு 10 மணிக்கு மேல் கழிவறையை Flush செய்யக்கூடாது, அந்நாட்டின் சட்டப்படி Noise pollutionஆக கருதப்படும்.
* ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் ராணுவத்தினரை தவிர, மற்றவர்கள் camouflage உடையணிவது சட்டப்படி மிக கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது.
* இலங்கையில் புத்தர்கள் சிலையுடன் செல்பி எடுத்துக்கொள்வது குற்றமாகும், மீறி செல்பி எடுத்தாலும் உடனடியாக அதை அழித்துவிட கூறுவார்கள், அதையும் செய்ய மறுத்தால் போலீசாரிடம் முறையிடப்படுமாம்.
* இத்தாலியின் Turin நகரில் செல்ல நாய்களை தினமும் குறைந்தது மூன்றுமுறை வெளியில் அழைத்து செல்ல வேண்டுமாம், இதை மீறுபவர்கள் 500 யூரோக்கள் அபராதமாக விதிக்கப்படுகிறது.
* Samoa தீவில் கணவன்மார்கள், மனைவிகளின் பிறந்தநாளை மறப்பது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது, இதுகுறித்து மனைவிகள் போலீஸ் நிலையத்தில் முறையிட்டால் உடனடியாக கணவனை லாக்அப்பில் அடைத்து விடுவார்களாம்.
* இத்தாலியின் வெனிஸ் நகரில் புறாக்களுக்கு இரையிடுவது குற்றமாகும், அதையும் மீறி யாராவது உணவளித்தால் 700 யூரோக்கள் அபராதமாக விதிக்கப்படும்.
* வடகொரிய மக்கள் சர்வதேச அழைப்புகளை மேற்கொள்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.