உடம்பு முழுவதும் முடியுடன் பிறந்துள்ள விசித்திர குழந்தை! அப்பட்டமாக உண்மையை உடைத்த மருத்துவர்
இந்தியாவில் ஆண் குழந்தையொன்று உடம்பு முழுவதும் முடியுடன் பிறந்த சம்பவம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரசவம்
உத்தரபிரதேசத்திலுள்ள ஹர்தோய் என்ற மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் குறித்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது குறித்த பெண்ணிற்கு அழகிய ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு பின்புறம் 60 சதவீதம் முடி இருந்துள்ளது.
இந்நிலையில் குழந்தைக்கு சில பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
அரிய வகை நோயின் பாதிப்பு
அதில் குழந்தைக்கு அரியவகை நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் இவருக்கு முதுகு பகுதியில் முடி முளைத்துள்ளது என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து பரிசோதனை மருத்துவர் சில விடயங்களை கூறியுள்ளார். இதன்படி, "தோலுக்கு நிறத்தை கொடுக்கும் மெலனோசைட்ஸ் நிறமிகளில் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்கம் குறித்து குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது.
புற்றுநோய் அபாயம்
இந்த நோயால் குழந்தைக்கு வந்திருக்கும் தோல் மிகவும் கடினமாக காணப்படும். இது புற்றுநோய் இல்லாவிட்டாலும் காலப்போக்கில் இது புற்றுநோயை ஏற்படுத்தும்.
மேலும் இந்த 'பேட்ச்' முதுகெலும்பை கடுமையாக அழுத்துவதால் மூளைக்கு அழுத்தம் ஏற்பட்டு தலைவலி, வாந்தி, நடப்பதில் பிரச்சினை போன்ற பாதிப்புக்கள் ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதளிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.