உப்பு சாப்பிடுவதை ஒரு மாதம் தவிர்த்தால் உடலுக்கு நல்லதா? கெட்டதா?
உப்பு சாப்பிடுவதை நாம் ஒரு மாதத்திற்கு நிறுத்தினால் உடலில் என்ன பிரச்சனைகள் உண்டாகும் என்பதை மருத்துவ விளக்கத்துடன் பார்க்கலாம்.
உடலுக்கு உப்பு அவசியம்
இன்றைய வாழ்க்கை முறையில் நாம் உணவில் அதிகமாக உப்பை அடிக்கடி பயன்படுத்துகிறோம். உப்பு இல்லாமல் உணவு சமைப்பது என்பது சாத்தியமற்ற விடயமாகும்.
ஆனால் ஒரு மாதத்திற்கு உப்பை முழுவதுமாக கைவிட்டால் என்ன நடக்கும் என்பதில் யாராவது யோசித்து உள்ளீர்களா? உப்பு மந்த உடலுக்கு மிகவும் இன்றியமையாதது.
இது சோடியம் மற்றும் குளோரைட்டின் முக்கிய ஆதாரமாகும். இது உடலில் உள்ள செல்களின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகின்றன.

சோடியம் ரத்த அழுத்தம், தசை சுருக்கம் மற்றும் நரம்பு சமிக்ஞைகளின் பரிமாற்றத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த காரணங்கள் இருக்கு என்பதால் உப்பு அதிகமாக உட்கொள்ள கூடாது.
அது உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். ஒரு நபர் நாள் ஒன்றிற்கு சராசரியாக சுமார் 5 கிராம் சோடியத்தை உட்கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஒரு மாதம் உப்பை நிறுத்தினால் என்ன நடக்கும்?
ஒரு நபர் ஒரு மாதத்திற்கு உப்பை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தினால், அவர் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலாவதாக, உடலில் சோடியம் குறைபாடு ஏற்படலாம், இது ஹைபோநெட்ரீமியாவுக்கு (குறைந்த சோடியம்) வழிவகுக்கும்.
இது தசை பலவீனம், சோர்வு, தலைவலி மற்றும் குழப்பம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உடலில் அதிகமான லக்ட்ரோலைட்டுகள் இல்லாமல் போகலாம்.

இது தசைப்பிடிப்பு மற்றும் இதய துடிப்பு அசாதாரணங்களுக்கு வழிவகுக்கும். நீடித்த உப்பு பற்றாக்குறை ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கலாம்.
அதன் மூலம் தைராய்டு மற்றும் அட்ரீனல் சுரப்பியின் செயலிழப்பை ஏற்படுத்தும்.உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் அதை முற்றிலுமாக தவிர்ப்பது உடல் நலப்பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
உப்பின் அளவைக் குறைக்க விரும்பினால், படிப்படியாகக் குறைப்பது நல்லது என சுகாதாரண நிபுணர்கள் கூறுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |