வயிற்று வலி உடனே குணமாக என்ன செய்யலாம்?
நம்முடைய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது வயிறு பகுதி தான், வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளால் பல நோய்கள் உண்டாகின்றன.
வயிற்றில் வலி இருந்தால் சாதாரணதா அல்லது தீவிர நோயின் அறிகுறியா என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
அதிக காரம் நிறைந்த உணவுகள், துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளால் வயிற்றில் வலி ஏற்படலாம்.
அல்சர், பித்தப்பை கற்கள், குடல் பகுதியில் ஏற்படும் தொந்தரவுகளினாலும் வயிற்றில் வலி உண்டாகலாம்.
இந்த பதிவில் வயிற்றில் வலி ஏற்பட்டால் உடனே சரிசெய்யக்கூடிய வீட்டு வைத்திய முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
வலி தொடர்ந்து ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.
* முதல்நாள் இரவே மாதுளம் பழத்தோலை நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த நீரை பருகவும், வயிற்று வலி குணமாகலாம்.
* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் இரண்டு டீஸ்பூன் தேன் கலந்து குடிப்பது நிவாரணத்தை தரலாம்.
* அரை டீஸ்பூன் ஓமம், கால் டீஸ்பூன் கருப்பு உப்புடன் சேர்த்து வாயில் போட்டு மென்று வர வயிற்று வலி, வயிற்று உப்புசம் சரியாகும்.
* வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கொள்ளவும், அரை டீஸ்பூன் வெந்தயப் பொடியை ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடித்துவர வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
* கொதிக்க வைத்த நீருடன் பெருங்காயப்பொடி சேர்த்து குடித்து வர வயிற்று வலி குணமாகும்.
* இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிவிட்டு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்த பின்னர் வடிகட்டி அறுந்த வயிற்று வலி சரியாகும், இதேபோன்று சீரகத்தையும் போட்டு குடித்துவர நிவாரணம் கிடைக்கும்.