Stolen Device Protection: உங்கள் ஐபோன் திருடு போனாலும் பாதுகாக்கும் அம்சம்! எப்படி பயன்படுத்துவது?
அப்பிள் ஐபோன்களில் புதுவித பாதுகாப்பு அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
iOS 17.3 betaவுடன் ஐபோன்களில் Stolen Device Protection என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது உங்கள் ஐபோன் திருட்டு போனாலும் இதன் மூலம் பாதுகாக்கலாம், இந்த பதிவில் இதனை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
எதற்காக Stolen Device Protection?
பொது இடங்களில் ஐபோன்கள் திருடு போவது அதிகரித்துள்ளதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
திருடர்கள், ஐபோன் உரிமையாளர்களை நோட்டமிடுவதும், அவர்களது Passcode, Apple ID Password போன்றவற்றை தெரிந்து வைத்துக்கொண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.
இதற்காக அப்பிள் உருவாக்கியுள்ள அம்சமே Stolen Device Protection.
இதன் மூலம் நம்பகமான வெளியிடங்களில் விட்டு வேறு இடத்திற்கு செல்லும் போது Biometric Authenticationயை உறுதிப்படுத்துகிறது.
Face ID அல்லது Touch ID தோல்வியடைந்தாலும், அடிப்படை செயல்பாடுகளுக்கு உங்கள் சாதனத்தை பயன்படுத்தலாம்.
ஆனால் பாதுகாப்பான சூழலுக்காக Apple ID Password அல்லது Passcodeகளை மாற்றுவது இயலாது.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் உங்களது ஐபோனில் iOS 17.3 beta அப்டேட் செய்து கொள்ளுங்கள். Settings பகுதிக்கு செல்லவும்.
அடுத்ததாக Face ID & Passcode அல்லது Touch ID & Passcode என்ற ஆப்ஷனை தெரிவு செய்து கொள்ளவும்.
Stolen Device Protection என்பதற்கு கீழ் Activate Protection என்பதை க்ளிக் செய்யவும்.
அவ்வளவு தான், உங்கள் சாதனம் பாதுகாப்பாக உள்ளது.
மேலும் உங்கள் சாதனம் திருட்டு போனாலும் மற்றவர்கள் பயன்படுத்துவதில் இருந்து பாதுகாப்பை வழங்குகிறது.