வயதாகாமல் எப்பொழுதும் இளமையாக இருக்க வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்
வயதான தோற்றத்தை தடுத்து இளமையாக இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முதுமையை தடுக்க என்ன செய்யலாம்?
பொதுவாக அனைவரும் என்றும் இளமையாக இருப்பதற்கே ஆசைப்படுவார்கள். ஆம் தோல் சுருங்கி முதுமை தோன்றக்கூடாது என்றும், உடல் வலிமை குறையாமல் இருக்கவும் ஆசைப்படுவார்கள்.
முதுமையை முழுவதுமாகத் தவிர்க்க முடியாது என்றாலும், சிறிது காலம் தள்ளிப் போடுவதற்கு முயற்சிக்கலாம்.
உடலளவில் சுறுசுறுப்பாகவும், சருமத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைக்குமாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதால் உடல் மற்றும் மன ஆரோக்கியமாக இருக்குமாம்.
5-6 பாதாம், 2 வால்நட் போன்ற பருப்புகளை காலை உணவில் சேர்த்துக் கொள்வது சருமத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
இரவில் படுக்கும் முன்பு 5 சொட்டு ஆளிவிதை எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து இளமையாக வைப்பதற்கு உதவுகின்றது.
தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடப்பதையும், உடம்பில் தேவையான நீர்ச்சத்து குறையாமல் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைக்க வேண்டும்.
சரியான அளவு தண்ணீர் பருகுவதால் உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற முடியும். இவ்வாறு சரியான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் முதுமையிலும், இளமையாக தோன்ற முடியுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |